கோட் படம் எப்படி இருக்கு ? ஒரே வார்த்தையில் விஜய் சொன்னது- என்னன்னு நீங்களே பாருங்க

0
106
- Advertisement -

கோட் படம் குறித்து விஜய் சொன்னதாக வெங்கட் பிரபு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

-விளம்பரம்-

லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது

- Advertisement -

கோட் படம்:

இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாகி இருக்கிறது. இதனால் தற்போது படத்திற்கான பிரமோஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதல் நாள் கட்சி தமிழ்நாட்டில் காலை 9:00 மணி தொடங்க இருப்பதாகவும், கேரளா மற்றும் ஆந்திராவில் அதிகாலை 4:00 மணி காட்சி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட் பிரபு பேட்டி:

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதை அடுத்து கோட் படத்தில் நடித்திருக்கும் பிரபலங்கள் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தும், படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறியும் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையை கோட் படத்தினுடைய சிறப்பு காட்சிகள் பிரபலங்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விஜய் சொன்ன விஷயம்:

அந்த வகையில் கோட் படத்தை பார்த்து நடிகர் விஜய், சூப்பராகவும், திருப்தியாகவும் இருக்கிறது. யுவன் பின்னிட்டான்யா என்று சொன்னதாக வெங்கட் பிரபு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடல்கள் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் படத்தின் பின்னணி இசை மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

கோட் படம் குறித்த தகவல்:

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இந்த கோட் படத்தில் இருந்து 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இந்த முறை இசை வெளியீட்டு விழா இல்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.

Advertisement