சில மாதங்களுக்கு முன்னர் புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன் சமூக பிரேச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்தார்.ஆனால் நிஜ வாழ்வில் கூட சமூக அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் அதிதி.

Advertisement

தான் கல்லூரி படிக்கும் போது ஒரு சிறுமிக்கு நடந்த பரிதாபமான சம்பவத்தை கூறியுள்ளார் அதிதி பாலன்.சமீபத்தில் பத்திரிகை நிகழ்ச்சி இன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில் “நான் கல்லுரியில் படித்து வந்த போது ஒரு ஆதரவற்ற சிறுமியை எனக்கு நன்கு தெரியும் அவருக்கு யாரும் இல்லாததால் நானும் எனது நண்பர்களும் எங்களால் முடிந்த உதவிகளை அந்த சிறுமிக்கு செய்துவந்தோம்.

பின்னர் சில நாட்களாக அந்த சிறுமியை நான் பார்க்கமுடியவில்லை,இதனால் நான் அவர் இருந்த இடத்தின் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அந்த சிறுமியை ஆட்டோவில் வந்த சிலர் கற்பழித்து கொலை செய்துவிட்டார்கள் என்று கூறினார்.இதனை கேட்டு என்னுடைய கண் கலங்கியது அந்த ஆட்டோகாரர் யார் என்று விசாரித்தால் அந்த சிறுமியை கொன்றது யார் என்று தெரிந்துவிடும் என்று என் நண்பர்களிடம் கூறினேன்.ஆனால் எனது நண்பர்கள் உனக்கு ஏதாவது பிரச்சனை வரும் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்களாம்”என்று கண் கலங்கியவாறு தெரிவித்தார்.

Advertisement

அந்த சிறுமியை கொன்றது நினைத்தாலே எனக்கு இப்போதும் அழுகை வருகிறது. இது போன்ற செயல்களை செய்யும் கொடியவர்களை சட்டம் தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement