பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த அதிதி ராவ் ! வாய்ப்பை பயன்படுத்திய ஸ்ரேயா !

0
9206

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்திக் நடித்த காற்று வெளியிடை படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ்.அந்த படத்திற்கு பிறகு பாவுட்டில் பல சர்ச்சைக்கு பிறகு வெளியான பத்மாவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது.

Daggubati-Venkatesh

ஆனால் தற்போது தெலுகு இயக்குனர் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில்,இளம் நடிகர் சுதீர் பாபா நடிக்கவுள்ள பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுகு சினிமாவின் முன்னணி நடிகராக வெங்கடேஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, ஆனால் அந்த படத்தின் வாய்ப்பை வேண்டாம் என்று தட்டிக்கழித்துள்ளார் அதிதி ராவ்.இயக்கனர் தேஜா இயக்கவிருந்த இந்த படத்தில் தற்போது ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக விளங்கிவரும் வெங்கடேஷ் படத்தில் நடிக்க பல நடிகைகள் காத்துக்கிடக்கும் நிலையில்,தனக்கு தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியுள்ளார் அதிதி ராவ்.