மேடையில் மீனாட்சி அருகில் அமர்ந்திருந்த வெங்கடேஷை எழுப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்

0
167
- Advertisement -

மேடையில் பிரபல நடிகையை ஐஸ்வர்யா ராஜேஷ் தள்ளிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் நடித்து தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. அதோடு சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி,ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

இருந்தாலும், இந்த படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. அதன் பின் கடந்த ஆண்டு இவர் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த தீராக் காதல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் டியர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

சங்கராந்திக்கு வஸ்துண்ணம் படம்:

இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் சங்கராந்திக்கு வஸ்துண்ணம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்கிறார். இவரின் காதலியாக கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், படத்தில் வெங்கடேஷ் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீரிஷ் மற்றும் தில் ராஜூ தயாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து தற்போது படத்திற்கான பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகை ஒருவரை ஐஸ்வர்யா ராஜேஷ் தள்ளிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மேடையில் நடந்த சம்பவம்:

அதாவது, மேடையில் வெங்கடேஷ்-மீனாட்சி சவுத்ரி இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்தார்கள். பின்னாடி இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இருவரையும்பிரித்து மீனாட்சியை தள்ளிவிட்டு வெங்கடேஷ் பக்கத்தில் நின்று கொண்டு போட்டோ எடுத்திருக்கிறார். அதன் பின் மீனாட்சி அருகில் அமர்ந்த வெங்கடேஷை திட்டி எழுப்பி விட்டு அங்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்ந்தார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஆனால், இது நகைச்சுவைக்காக செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement