இந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து தேசிய விருதை பெற வேண்டும் – ஐஸ்வர்யா ராஜேஷ்

0
796
Aishwarya-Rajesh
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். சிவகார்த்திகேயனை போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஆரம்பத்தில் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது என்னவோ, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நீதான அவன்’ என்ற படத்தின் மூலம் தான். ஆரம்பத்தில் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் இவருக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற படங்கள் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.பின்னர் இந்த இளம் வயதிலேயே அம்மாவாகவும், ஹீரோவின் தங்கையாகவும் நடித்தது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பது வியப்பான விஷயம் தான்.

- Advertisement -

தற்போது லீட் ரோலில் நடிக்கும் அளவிற்கு ஒரு டாப் ஹீரோயினாக மாறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பூமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். கனா படத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படம் குறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், பூமிகாவும் ஒன்று. 

இந்த படத்தின் படப்பிடிப்பை 35 நாட்களில் நடித்து முடித்தேன். ரலாற்று படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, மனோரமாவின் பயோபிக் படத்தில் நடித்து, தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது, என் நீண்ட கால ஆசை. நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement