தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அமலா பால். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகை அமலாபால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் நடிகை அமலா பால் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் அதன் பின்னர் அவருக்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் என்று பல்வேறு நடிகர்களுடனும் நடிகை அமலாபால் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை அமலாபால்.
மேலும், தனது சொந்த வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார் நடிகை அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த படத்தில் நடிகை அமலாபால் முழுக்க முழுக்க நிர்வாணமாக நடித்து பலரையும் வியக்க வைத்தார்
அமலா பாலின் முன்னாள் கணவரான இயக்குனர் விஜய் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.
அதன் பின்னர் தான் ஒரு நபரை காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அமலா பால். இப்படி சர்ச்சைக்கு பாஞ்சமே இல்லாத அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது பெயரில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் அம்மணிக்கு பெரும் பிரபலம் கிடைத்துள்ளது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி எதாவது சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
மேலும், நடிகை அமலாபாலுக்கு தற்போது எந்த படமும் கைவசம் இல்லை அதனால் தனது ஓய்வு நேரத்தை பல்வேறு இடங்களுக்கு சென்று செலவழித்து வருகிறார். மேலும், அடிக்கடி கவர்ச்சியாக எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலாபால் கடற்கரையில் ஊஞ்சல் ஆடும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுவும் ஊஞ்சலில் ஆடியபடி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அமலாபால் திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற அமலாபால் தற்போது அடங்காமல் இருந்து வருகிறார் என்று மாற்றிச் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்