முதல் முறையாக அக்மார்க் நீச்சல் உடையில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.

0
16784
- Advertisement -

மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் காலடி எடுத்து வைத்து பிரபலம் அடைந்துள்ளனர். நயன்தாரா, பாவனா, மாளவிகா மோஹனன் என்று பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார். இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஒரே ஒரு மகனுக்கு இப்படி ஒரு நோய் – நடிகர் பப்லு வாழ்வில் ஏற்பட்ட சோகம்.

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இடையில் இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்று கூட புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், அது வெறும் போட்டோ ஷூட் தான் என்று கூறி இருந்தார் அமலா பால். தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகை அமலா பால் முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement