ஒரே ஒரு மகனுக்கு இப்படி ஒரு நோய் – நடிகர் பப்லு வாழ்வில் ஏற்பட்ட சோகம்.

0
4019
babloo
- Advertisement -

47 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்தாலும் ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனுக்காக விழிப்புணர்வு செய்து ரியல் லைப்பில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவரின் இந்த செயல் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரை உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரித்திவிராஜ் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமா உலகில் நுழைந்து 47 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் சின்னத்திரை சீரியல்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் உள்ளார். இவருடைய மகனின் பெயர் அகத்.

- Advertisement -

தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரை மகனுக்காவே தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், பப்லு மற்றும் அவரின் மனைவி இருவரும் மற்றொரு குழந்தையை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய ஒரே மகனையே குறையின்றி பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தையை சரியாக வளர்ப்பது மட்டும் தான் கடமை என்று மற்ற அப்பாக்களை போல் யோசிக்காமல் தன் மகனைப் போல உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களின் தேவைகள், புரிதல்கள் என்ன என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார் பப்லு . இவர் சினிமாவில் நடிப்பு மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கும் ஏற்படக்கூடாது என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் இந்த செயல் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement