படு தோல்வி அடைந்த படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை பாராட்டிய நடிகை அமலா.

0
20026
amala-samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா உடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். அந்த படத்தில் இருந்து இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பின் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில வருடங்களாகவே சமந்தா அவர்கள் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழில் அதிரடி கம்பேக் கொடுத்து உள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிகை சமந்தாவிற்கும், அவரது கணவர் நாக சைதன்யா குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருப்பதாக சமூகவலைதளங்களில் பல தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீப காலமாகவே தமிழில் இவர் நடித்த சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு தியாகராஜன், குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ்.

- Advertisement -

இந்தப் படம் மக்கள் மத்தியில் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், நவீன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த படத்திற்காக நடிகை சமந்தா அவர்களுக்கு சிறந்த நடிகை என்ற சினிமா சென்ட்ரல் எக்ஸ்சலன்ட் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை சமந்தாவை குறித்து அவரது மாமியாரும், நடிகையுமான அமலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

அதில் அவர் கூறியது, சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்தேன். மிகத் திறமையாகவும், கன கச்சிதமாகவும் சமந்தா நடித்து உள்ளார். அவருடைய கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைத்தது என்று தெரிவித்து உள்ளார். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் சமந்தாவின் ஆடை மற்றும் பட விவகாரம் குறித்து நாகர்ஜுனா குடும்பத்தில் பல பிரச்சனைகள் எழுந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவரது மாமியார் அமலா அவர்கள் சமந்தா குறித்து பதில் கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உள்ளது. தற்போது நடிகை சமந்தா அவர்கள் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு என்ற படத்தில் நடித்து உள்ளார். திருமணமானாலும் நடிகை சமந்தா அவர்கள் கவர்ச்சியாகவே உடையில் காட்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement