முதன் முதலாக தன்னுடைய காதலனை அம்மு அபிராமி அறிமுகப்படுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அம்மு அபிராமி இருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன் இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக அபிராமி நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ராட்சசன் படத்தில் தான். அதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
அம்மு அபிராமி குறித்த தகவல்:
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அம்மு அபிராமி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். சமீப காலமாக இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்தார்.
அம்மு அபிராமி நடித்த படங்கள்:
அதற்கு பின் அம்மு நடிப்பில் வெளியாகி இருந்த கண்ணகி படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, அபிராமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதை அடுத்து அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியிருந்த ஹாட்ஸ்பாட் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் கார்த்தி இயக்கியிருந்தார். இதை அடுத்து சில படங்களில் கமிட்டாகி பிசியாக அம்மு நடித்து வருகிறார்.
அம்மு அபிராமி காதல்:
இந்நிலையில் முதன்முதலாக தன்னுடைய காதலனை அம்மு அபிராமி அறிவித்திருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிக அளவில் அம்மு அபிராமி பிரபலமாகி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பலருடைய நட்பு கிடைத்தது. அதில் ஒருவருடைய நட்பு தான் காதலாக மாறியது.
அம்மு அபிராமி பதிவு:
அதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசனுக்கும் இயக்குனராக இருந்தவர் பார்த்தீவ் மணி. இன்று பார்த்தீவ் மணியோட பிறந்தநாள். இதனால் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் அம்மு அபிராமியும் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், பிறந்ததற்கு நன்றி. வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று ஹார்ட் இமோஜி போட்டிருந்தார். இதைப் பார்த்த பலருமே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? இவர்தான் உங்கள் காதலரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்