எதிரணியில் கணவர்,புடவையை மடித்து கட்டி கொண்டு கபடி விளையாடிய நடிகை ரோஜா. வைரலாகும் வீடியோ.

0
1143
roja
- Advertisement -

இளைஞர்களுடன் நடிகையும் எம் எல் ஏவுமான ரோஜா கபடி விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

-விளம்பரம்-

நடிகை ரோஜா அவர்கள் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகளை செய்து வந்தார் ரோஜா. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது கூட தனது பகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்து அசத்தி இருந்தார் ரோஜா.

- Advertisement -

இந்நிலையில் ரோஜா அறக்கட்டளை சார்பில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நகரி சட்டமன்ற தொகுதியில் உள்ள டிகிரி கல்லூரி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க தனது கணவர் ஆர்.கே செல்வமணியுடன் சென்ற நடிகை ரோஜா , பச்சை கொடி காட்டி பிகில் அடித்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் ரோஜாவின் கணவர் ஆர்.கே செல்வமணி ஒரு அணியிலும் , ரோஜா தலைமை ஒரு அணியாகவும் நின்று கபடி விளையாடினர். இதில் முதலில் ரோஜா ரைடு சென்றார். பின்னர் ஆர் கே செல்வமணி ரெய்டுக்கு வந்தார். இவர்கள் இருவரும் படு உற்சகமாக கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement