விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி . மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவ இவர், தனது 20 வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பாஞ்சாபி என பல மொழிகளில் 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது சாமுராய் படத்தில் தான்.
ஆனால், சாமுராய் படத்திற்கு முன்பாகவே இவர், மனோஜுடன் நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படம் வெளியாகி இருந்தது. சாமுராய் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு பின்னர் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தினை இளைய தளபதி விஜய்யின் தந்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் அனிதாவை அறிமுகம் என்று டைட்டிலில் அறிவித்திருந்தார் எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்ரன் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின்னர் நாயகன், மஹாராஜா போன்ற இரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாத போதும் இவருக்கு இந்தி, கன்னடம், பஞ்சாபி என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் டீவி சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடிக்க துகாங்கினார் அனிதா.
கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரை வைத்துள்ளனர். நடிகை அனிதா ஹசானந்தனி, தனது குழந்தை ஆரவ் ரெட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.