அனுஷ்கவை வைத்து சூர்யாவை கிண்டல் செய்த தொகுப்பாளினிக்கு அனுஷ்கா கொடுத்த பதிலடி

0
6354
Sun-Music-VJ-Niveditha-and-Sangeetha

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர் இரண்டு தொகுப்பாளினிகள். இதனால் அந்த இருவருக்கும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

Sangeetha

உச்சகட்டமாக அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்கவேண்டும் என சன் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடித்தினர் சூரியா ரசிகர்கள். இந்நிலையில் இந்த விஷயத்தை பற்றி தனது கருத்தினை கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

இதுபற்றி நான் கருத்து கூறுவது மரியாதையாக இருக்காது. இது போன்ற விஷயங்களுக்கு நான் எப்போதும் கருத்து கூறுவது இல்லை.

suriya anushka

ஆனால் அவரவர் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்களது அளவில் இருக்க வேண்டும். பிரபலமாக இருப்பதால் வாயில் வந்தவற்றை எல்லாம் பேசிவிடக் கூடாது என அந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அனுஷ்கா.