கார்த்தி பட நடிகை தன்னுடைய தந்தை மீது அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் அர்த்தனா பினு. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் சமுத்திரகனி நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த தொண்டன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான செம என்ற படத்தில் கதாநாயகியாக அர்த்தனா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பின் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த கடைசி குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அர்த்தனா திரைப்பயணம்:

அதன் பின் வெண்ணிலா கபடி குழு 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படி இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அர்த்தனா தன்னுடைய தந்தை மீது அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை அர்த்தனா பினுவின் தந்தை மலையாள நடிகர் விஜயகுமார். இவர் மீது தான் அர்த்தனா குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார்.

அர்த்தனா பதிவிட்ட வீடியோ:

இது தொடர்பாக அர்த்தனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய பெற்றோர் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்தவர்கள். நானும் என்னுடைய அம்மாவும், சகோதரியும் 80 வயதிற்கு மேற்பட்ட என்னுடைய பாட்டியின் அதாவது எங்கள் தாய் வீட்டில் தான் வசித்து வருகிறோம். ஆனால், எங்கள் தந்தை பல ஆண்டுகளாகவே எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பிரச்சனை செய்து வருகிறார். அவர் மீது பல வழக்குகள் இருக்கிறது.

Advertisement

அர்த்தனா தந்தை செய்யும் பிரச்சனை:

அது மட்டும் இல்லாமல் அவர் எங்கள் வீட்டுக்குள்ளே நுழைந்து கொலை மிரட்டலையும் விடுக்கிறார். கதவு பூட்டப்பட்டிருந்தால் ஜன்னல் வழியாக என் தங்கையையும், பாட்டியையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். பின் நான் படங்களின் நடிப்பதை நிறுத்தி விடுவேன். கீழ்ப்படியாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றெல்லாம் மிரட்டுகிறார். நான் நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் தான் நான் நடிக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். மேலும், நான் வேலை செய்யும் இடத்தில் அத்துமீறி நுழைந்து பிரச்சனைகளையும் செய்கிறார்.

Advertisement

தந்தை மீது அளித்த புகார்:

அதேபோல் என்னுடைய அம்மா வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை செய்கிறார். என்னுடைய சகோதரியின் கல்வி நிறுவனத்தில் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நானும் என்னுடைய அம்மாவும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால்தான் இவர் எங்களிடம் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement