முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அசின்..!

0
1074
Asin

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

View this post on Instagram

Happy 1st birthday ARIN ! #arinturnsone

A post shared by Asin Thottumkal (@simply.asin) on

அறிமுமானவர்.அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார்.

- Advertisement -

Asindaughter

பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின். திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது. இதுவரை தனது மகளின் புகைப்படத்தை எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் அசின் பதிவிட்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் கூட தனது மகளின் பாதத்தை மட்டும் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று (அக்டோபர் 25)நடிகை அசின் மகள் அரின் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார். தனது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை அசின் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement