பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் அசின்.! ரசிகர்கள் குஷி.!

0
3220
actress-asin
- Advertisement -

தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அசின். அவர் பல மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சினிமா துறைக்கு டாட்டா சொல்லி விட்டு போய்விட்டார். அசின் பிரபல தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மேலும் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. சில தினங்களுக்கு முன்னால் ஓணம் பண்டிகையை ஒட்டி அவர்கள் தன்னுடைய குழந்தையை ஒணம் உடையில் சந்தோசமாக கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

-விளம்பரம்-
Image result for asin daughter

இந்தநிலையில் சினிமா துறையில் அசின் மீண்டும் படம் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையங்களில் வைரலாகி வருகிறது.இதனால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அசின் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்து உள்ளார். மேலும் அவர் ஹிந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் ரீ-என்ட்ரி கொடுக்க ஒரு நல்ல கதைக்காக ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் ரசிகர்கள் அனைவரும் அசின் படம் நடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : 3 வயதில் ஷெரீனை விட்டு சென்ற தந்தை இவர் தான்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.!

அசின் தொட்டும்கல் 1985 இல் அக்டோபர் மாதம் பிறந்தார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய நடிகை ஆகும். இவர் பரத நாட்டியத்தில் நிறைய பயிற்சி பெற்று பட்டங்களையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். 2001 ஆம் ஆண்டில் ‘சத்தியன் அந்திக்காடு’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தன்னுடைய நடிப்பின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். தமிழில் கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அதிக அளவில் தமிழக மக்களிடையே பேசப்பட்டு வந்தார். இதனால் நிறைய விருதுகளும் வென்றார்.

-விளம்பரம்-
Image result for asin hsuband

இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்து தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் அசின் சில காலமாகவே சினிமா துறைக்கு வரப்போகிறேன். விரைவில் நடிகை அசின் இந்தி அல்லது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இதற்காக அவர் பல கதைகளையும் கேட்டு வருகிறாராம் எனவே, அசின் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி கொண்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement