அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணாமல் இருந்ததால் எனக்கு முன்னணி நடிகை வாய்ப்பு பறிபோனது என்று நடிகை பாலாம்பிகா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பாலாம்பிகா. இவர் வேற யாரும் இல்லைங்க, பழம்பெரும் இயக்குனர் கே எஸ் கோபால கிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பவரின் மகள் தான். நடிகர் முரளி நடித்த பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் பாலாம்பிகா.
இந்த படத்தில் இவர் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பாலாம்பிகா அவர்கள் நடிகன் என்ற படத்தில் குஷ்பூவுக்கு தங்கையாக நடித்திருந்தார். பின் பாட்டுக்கு ஒரு தலைவன் என்ற படத்தில் விஜயகாந்த் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின் திருமதி பழனிசாமி என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாக நடித்தார். இப்படி தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களுக்கு தங்கை வேடத்தில் பாலாம்பிகா நடித்து இருக்கிறார்.
பாலாம்பிகா திரைப்பயணம்:
பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் இதுவரை பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து நடிகை பாலாம்பிகா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எல்லோருமே அட்ஜஸ்ட்மென்ட் பத்தி பேசுகிறார்கள்.
பாலாம்பிகா அளித்த பேட்டி:
மீடியாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருப்பது உண்மைதான். நான் ஆரம்பத்தில் படங்களில் நடித்த போது அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அது மட்டும் இல்லாமல் என் அப்பாவிற்கும் அந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் நீ நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறி இருந்தார். முன்னாடி நடிகை என்ற வாய்ப்புக்காக எனக்கு இதெல்லாம் தேவையில்லை.
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சொன்னது:
நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதோடு விஜய்யுடன் நான் நடித்திருந்தால் அப்போது என்னுடைய வாழ்க்கையே மாறி இருக்கும். அதேபோல் என்னுடைய திருமண வாழ்க்கையும் எனக்கு சரியாக அமையவில்லை. கணவரும் சரியில்லை. அதனால என்னோட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறேன். நன்றாக சம்பாதித்த போது கொஞ்சம் அதிகமாக ஆடிவிட்டேன்.
தற்போதைய நிலை குறித்து சொன்னது:
அதனால் அனைத்தையும் நான் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நான் நடிகர் சத்யராஜ் தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20000 ரூபாய் பணம் கொடுத்திருந்தார். விஜயகாந்த் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது எனக்கு வாய்ப்புகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று வேதனை உடன் நடிகை பாலாம்பிகா அளித்திருந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.