நடிகர் விஜய் குறித்து நடிகை பாலாம்பிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை பாலாம்பிகா. இவர் வேற யாரும் இல்லைங்க, பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பவரின் மகள் தான். இவர் நடிகர் முரளி நடித்த பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
இந்த படத்தில் இவர் கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு பாலாம்பிகா அவர்கள் நடிகன், பாட்டுக்கு ஒரு தலைவன், திருமதி பழனிசாமி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் இதுவரை பல சீரியல்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
பாலாம்பிகா பேட்டி:
அதற்கு பின் இவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை பாலாம்பிகா, விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. உண்மையில் நான் அந்த படத்தில் நடித்திருக்கலாம். ஆனால், எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறது. அது எனக்கு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். சில விஷயங்களில் எல்லாவற்றுக்குமே நாம் ஒத்துக் கொண்டு போக முடியாது.
விஜய் படம்:
இப்போது நினைத்துப் பார்த்தால் அந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. விஜயுடன் நாளை தீர்ப்பு படத்தில் சேர்ந்து நடித்திருந்தால் இன்று என்னுடைய பெயர் உலகம் முழுக்க தெரிந்திருக்கும். அந்த படத்தில் நான் நடிக்க உறுதி செய்யப்பட்ட பின் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி படத்தில் நடிக்கிறேன் என்றவுடன் எனக்கு ரொம்ப சந்தோஷம். அடுத்த நாள் அவரை பார்க்க போனேன். அப்போது அவர், விஜயை அழைத்து எனக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.
சினிமா அனுபவம்:
இவர் தான் என்னுடைய மகன். என்னுடைய இந்த படத்தில் இவர் தான் ஹீரோ என்று சொன்னார். அப்போது நான் ரொம்ப வெள்ளையாக, க்யூட்டாக இருந்தேன். விஜய் கருப்பாக இருந்தார். விஜய்யை பார்த்த உடனே, நமக்கு இவன் ஜோடியா? என்று நினைத்தேன். இருந்தும் பரவாயில்லை எஸ்ஏசி சார் படத்தில் நடிக்கலாம் என நினைத்துக் கொண்டேன். விஜய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அப்போதெல்லாம் அழகு கிடையாது. பங்க் வைத்திருப்பார்.
விஜய் குறித்து சொன்னது:
இப்போது போல அவர் அப்போ கலர் கிடையாது. கருப்பாக ஒரே மாதிரி மாநிறமாக தான் இருப்பார். நான் இவருடன் நடிக்க வேண்டுமா? தலையெழுத்து என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், இப்போது நான் வருத்தப்படுகிறேன். அவருடன் நடித்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். சில காரணங்களால் தான் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறி இருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.