இது போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் – ஆதித்ய பட நடிகைக்கு குவியும் பாராட்டு.

0
1145
banita

தமிழ் சினிமாவில் பல மொழி படங்கள் ரீமேக் ஆகுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியாகி உள்ளது. ஆனால், முதலில் இந்த படத்தை இயக்குனர் பாலா அவர்கள் வர்மா என்ற பெயரில் படத்தை உருவாக்கினார். பின் பல பிரச்சனைகள் காரணமாக இந்த வர்மா படம் முற்றிலும் நின்று விட்டது.

அதன் பின்னர் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இந்த படம் வெளியானது.ஆதித்ய வர்மா படத்தில் நடித்த பனிதா சுபாஷ், வர்மா படத்தின் நாயகியை போல லுக்கில் இல்லை என்றாலும் ஒரிஜினல் வெர்ஷன் போல லிப் லாப் காட்சிகளில் பஞ்சமில்லாமல் நடித்து அசத்தி இருந்தார் பனிதா. பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகியும் பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ந்த படத்தின் மூலம் இவருக்கு இந்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.சமீபத்தில் பிரபல பத்திர்கையாளர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், இதுவரை ஸ்கின் கிரீம் விளம்பரத்தில் நடிக்காத பாலிவுட் அல்லது பாக்கிஸ்தான் நடிகர்கள் யாராவது ஒரு பெயரை சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த பனிதா, இந்திய ஏஜென்சி ஒன்றின் ஒப்பந்தத்தில் முதன் முறையாக நான் கையெழுத்து செய்தபோது அவர்கள் என்னிடம் உங்களுக்கு புகையிலை, மது போன்ற ஏதாவது பொருட்களை விளம்பரம் செய்வதற்கு ஆட்சேயபணை இருக்கிறதா என்று கேட்டார்கள்.

அதற்கு நான் ஸ்கின் லைட்னிங் தயாரிப்புகளுக்கு நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என்று கூறி இருந்தேன். அதன் பின்னர் அவர்கள் எனக்கு அது போன்ற எந்த ஒரு விளம்பரத்தையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே இது போன்ற பேர்னஸ் கிரீம் விளம்பரத்தில் நடிக்க கோடிகளை கொடுக்க தயாராக இருந்தும் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்தார் பிரபல நடிகையான சாய் பல்லவி. அந்த வகையில் தற்போது பனிதவும் சமூக அக்கறையோடு இப்படிபட்ட விளம்பரங்களில் நடிக்க மறுத்துலுள்ளதை அறிந்து பலரும் பனிதாவை பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement