அம்மா அப்பாவை போல தோல்வியில் முடிந்த திருமண வாழ்க்கை – இத்தனை கஷ்டங்களை கடந்து வந்துள்ள பானுபிரியா.

0
768
banu
- Advertisement -

சினிமா துறையில் நுழைந்த அனுபவம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை பானுப்பிரியா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானு ப்ரியா. பானுப்பிரியா நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மேலும், இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 80- 90 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடிக்க தொடங்கி தற்போதும் இவர் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை இவர் 150 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

பானுப்ரியா திரைப்பயணம்:

அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது இவர் சீரியலிலும், படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பானுப்பிரியா அவர்கள் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சின்ன வயதில் இருந்து எனக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்த காலத்தில் எல்லாம் ரேடியோ மட்டும் தான் இருக்கும். அதில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவேன்.

பானுப்ரியா அளித்த பேட்டி:

எனக்கு இசை மீது அதிக ஆர்வம் இருப்பதை என்னுடைய அப்பா அம்மா கவனித்தார்கள். அதற்கு பிறகு தான் என்னை கிளாசிக்கல் நடனத்தில் சேர்த்து விட்டார்கள். நடன பயிற்சி பள்ளியில் நான் சேரும்போது எனக்கு ஐந்து வயது. அதற்கு பின்னர் ஆனந்த் மாஸ்டரிடம் குச்சிப்புடி நடனம் கற்றேன். காலையில் எழுந்து தயாரான பின்னர் முதலில் நடனம் கற்றுக் கொண்ட பின்னர் தான் பள்ளிக்கு செல்லக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது. மற்ற பிள்ளைகளை போல பள்ளி கிளம்புவதற்கு முன்பு ஹோம் ஒர்க் நான் செய்தது கிடையாது.

-விளம்பரம்-

நடனம் குறித்து சொன்னது:

நடனம் தான் எனக்கு முக்கியத்துவமாக அளிக்கப்பட்டது. நான் எட்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்தேன். அதற்கு பின்பு நடிக்க வந்துவிட்டேன். பள்ளிப்பருவத்தில் தான் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். எனது அம்மா மிகவும் கண்டிப்பானவர், மிகவும் கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் என்னை அவர் வளர்த்தார். ஒரு விதத்தில் அது எனக்கு மிகவும் பயனாகவும் அமைந்தது. சின்ன வயதிலேயே எனது அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டார்கள். இதனால் ஒரு மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை எனக்கு அமையவில்லை.

சினிமா பயணம்:

அப்போது டிவி கிடையாது, தியேட்டர் தான் உண்டு. இதனால் படங்களை பார்த்து பார்த்து அவற்றை நான் உள்வாங்கிக் கொண்டேன். சினிமாவில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நான் கற்றுக் கொண்ட நடனம் தான். அதிகம் படிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே இருக்கும். தமிழ் மொழி படங்களில் நடித்த பிறகுதான் எனக்கு பிற மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. நான் சினிமா துறையில் நுழைந்த ஆரம்பத்தில் எதிர்பார்க்காத பல கதாபாத்திரங்கள் தந்தார்கள். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த அனுபவங்கள் எல்லாம் என்னால் மறக்க முடியாது. இந்த புகழுக்கு சொந்தம் இயக்குனர்கள் பி வாசு மற்றும் சந்தான பாரதிக்கு தான் என்று கூறியிருந்தார்.

Advertisement