14 வயது சிறுமையை கொடுமைபடுத்திய விவகாரம்.! பானுபிரியா கைதாகும் வாய்ப்பு.!

0
7946
Bhanupriya-brother
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 90,20கலில் நூற்றுக்கும் மேலான படங்களில் கதாநாயகியாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின்னால் குணசித்திர கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார். பானுப்பிரியா அம்மா வேடங்களிலும் கூட நடித்துள்ளார். தமிழ் மொழியில் கடைசியாக இவர் நடித்தது சிவலிங்கா, மகளிர் படம் தான். இந்தநிலையில் நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை செய்து வந்த பிரபாவதி என்பவர் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகார் அளித்துள்ளார்.அது தன் மகளை நடிகை பானுப்ரியா அவர்கள் கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அந்த புகாரில் பிரபாவதி கூறியது, நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் எங்கள் குடும்ப சூழ்நிலைக்காக 14 வயதுடைய என் மகள் சந்தியாவை நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன் . அவர்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக எனக்கு வாக்குறுதி அளித்து என் மகளை அவர்கள் அழைத்துச் சென்றார்கள். ஆனால் கடந்த 18 மாதங்களுக்கு மேலாகவே எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இது குறித்து கேட்டாலும் என்னிடம் அவர்கள் இப்ப தரோம், அப்ப தரோம் என்று கூறி ஏமாற்றினார்கள். என்னுடைய மகளையும் என்கிட்ட
காமிப்பதுமில்லை.திடீர் என்று சில மாதங்களுக்கு முன்னால் என் மகள் வேறு யாரோ ஒருவருடைய மொபைல் மூலம் என்னை தொடர்பு கொண்டால், அவள் பானுப்ரிய அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் என்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார், தினமும் அடித்து என்னை கொடுமைப் படுத்துகிறார்கள் என்று அழுதுகொண்டே கூறினார். இந்த சம்பவம் என் நெஞ்சை பதர வைத்தது. இதை பானுப்பிரியா அவர்களிடம் கேட்பதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றேன் ஆனால் அங்க இருந்தவங்க எல்லாம் உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ. எங்களிடம் பணம் இருக்கு, செல்வாக்கு இருக்கு ,அரசியல் பலம் இருக்கு. எப்படியும் எங்களால் எங்களை காப்பாற்றி கொள்ள முடியும். உன் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி உன்னையும் உன் மகளையும் ஜெயிலுக்கு அனுப்பப்போறேன். நீங்கள் எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்கிறாய் என்று பார்க்கிறேன் என்று என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டனர்.

- Advertisement -
Image result for banu priya

எனக்கு நடந்த இந்த அநியாயமான விஷயத்தில் காவல்துறையும், நீதிமன்றமும் தலையிட்டு எனக்கு தக்க நியாயம் வாங்கி தரும் என்று நினைக்கிறேன். பிரபாவதியின் புகார் மனுவை வாங்கிய போலீசார் பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளும் அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டு குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். மேலும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பானுப்பிரியா வீட்டில் அவரை கொடுமைப்படுத்தியதாக சொன்னது உறுதி செய்யப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின்கீழ் பானுபிரியா மீது தொழிலாளர் நலத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதற்கு நடுவில் பானுப்பிரியா என்னுடைய வீட்டில் திருட்டு போய்விட்டது அதற்கு காரணம் அந்த சிறுமியும் அவருடைய அம்மாவும் தான் என்று புகார் அளித்தார்கள்.

இதனை அறிந்த போலீசார் உடனே சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு, சிறுமியை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளார்கல் என்று தெரியவந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு அப்படியே மூடி வைத்து விட்டனர். ஆனால் தற்போது குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்பு இந்த பிரச்சனையை மீண்டும் தோண்டி எடுத்து, பானுப்பிரியா மீது வழக்கை தொடர வேண்டுமென புகார் அளித்துள்ளது. மேலும் குழந்தையை கொடுமைபடுத்தியாக பானுப்பிரியா மீது விசாரணை செய்ய பாண்டி பஜார் காவல் துறைக்கு பரிந்துரை செய்தார்கள். குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்பு பானுப்பிரியாவை கைது செய்யப்படுவார்களா?உண்மையாகவே அவர்கள் அந்த சிறுமியை கொடுமைப்படுத்திய இருப்பார்களா?பானுப்பிரியா கொடுமை செய்தது உண்மை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பல கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-
Advertisement