பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் பானுப்பிரியாவின் தங்கை (அட, இந்த ராமராஜன் பட நடிகையா)

0
3766
banu
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை பானு ப்ரியா. 90ஸ் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று அணைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். தற்போது சினிமாவில் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பானுப்பிரியாவிற்கு சாந்திப்பிரியா என்ற தங்கை இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான். 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா.

-விளம்பரம்-
shantipriya

இவர் முதல் படத்திலேயே தமிழக மக்களின் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் ஹிந்தி டிவி தொடர்களில் நடிக்க சென்றுவிட்டார். பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் துறையில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

मिथुन की एक्ट्रेस ने फैमिली के खिलाफ जाकर की शादी पर 7 साल भी नहीं चला  रिश्ता, अब अकेले पाल रही बेटी | Mithun Chakraborty Actress Bhanupriya  Birthday and Life interesting ...

மேலும், இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement