இதை செய்யாததால் தான் நான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன்.! பத்மப்ரியா அதிர்ச்சி தகவல்..!

0
1673
Padhmapriya-Actress

தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அலைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் கூறிவருகின்றனர். பல முன்னணி நடிகைகள் கூட தங்கள் வாழ்விலும் சில இயக்குனர்கள் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்திருக்கின்றனர் என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

padhmapriya

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகையான பத்மப்ரியா, நான் சினிமாவில் யாருடனும் எனது படுக்கையை பகிராததால் தான் சினிமாவில் புறம் தள்ளப்பட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். கேரளாவை பூர்விக கொண்ட இவர் 2005 ஆம் ஆண்டு சேரன் நடித்த ‘தவமாய் தவமிருந்து ‘ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

அதன் பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், இடையில் 3 ஆண்டு காலம் சினிமாவில் தலை தெரியாமல் இருந்தார். பலர் இவர் திருமணம் செய்து கொண்டதால் தான் சினிமாவில் பிரேக் எடுத்து விட்டார் என்று எண்ணினர், ஆனால் தான் சினிமாவில் அதிகம் நடிக்காததற்கான காரணத்தை ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Padmapriya

இதுபற்றி சமீபத்தில் அவர் தெரிவிக்கையில்”சினிமாவில் நீங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர்ந்து கொள்ளவேண்டும், அதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும். நான் படுக்கையை பங்கு பெற மறுத்ததால் தான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறேன்.

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் புதுமுக நடிகைகள் மட்டும் தான் சந்திக்கிறார்கள் என்று எண்ணாதீர்கள். ஒரு சில புகழ் பெற்ற முன்னனி நடிகைகளும் சினிமாவில் நிலைத்து இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், அதனை பயன்படுத்தி அவர்களும் இந்த அழுத்தத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், என்னிடம் நடிப்பை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று தெரிந்ததால் என்னை ஒதுக்கி விடுவார்கள். படுக்கையை பங்கிட்டவர், சினிமாவில் வெற்றியடைந்துவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியுமா என்ன ?” என்று திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.