கட்டிலில் கணவரோடு எடுத்த செல்ஃபீ – வைரலாகும் பாவனாவின் புகைப்படம்.

0
16443
Bhavana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பாவனா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் அதிகமாக மலையாள மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று.

-விளம்பரம்-

இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து மலையாள திரையுலகில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் தான் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார்.

- Advertisement -

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்து உள்ளார்.. தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் கன்னடத்திலும் நல்ல பெயரை வாங்கி தந்தது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் கணவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு கணவரை பற்றி உருக்கமான சில விஷயங்களை எழுதியுள்ளார் பாவனா.

-விளம்பரம்-
Advertisement