கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை பாவனா பகிர்ந்து இருக்கும் போஸ்ட் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை விட்டு ஏவி பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து இருந்தது. இதற்காக இவர் 85 நாள்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
பாவனா கடத்தல் வழக்கு:
இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் பிரபல சேனலுக்கு திலீப்புக்கு எதிராக பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், திலீப் தான் நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது குறித்தும் கூறி இருக்கிறார். அதோடு திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதனை தொடர்ந்து பாலசந்திரகுமார் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு திலீப் மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணை:
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. இருந்தும் பாவனா மன உறுதியோடு போராடி வருகிறார். இந்த சம்பவம் தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. மேலும், நடிகை பாவனா தரப்பில் இருந்து முக்கியமான ஆதார வீடியோ ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற காவலில் இருந்தே அந்த முக்கிய ஆதாரமான மெமரி கார்டை சட்டவிரோதமாக மூன்று முறை கையாண்டு இருக்கிறார்கள். இதை கடந்து 2018 ஆம் ஆண்டு கேரள தடயவியல் துறை தெரிவித்தது.
நீதிமன்றத்தில் நடந்தது:
இதனை எடுத்து இந்த வழக்கு இன்னும் அதிகமாக சர்ச்சையானது. இது தொடர்பாக விசாரணை நடத்தபோது மெமரி கார்டை எர்ணாகுளம் மாவட்ட நீதிபதியின் அசிஸ்டன்ட் லீனா ரஷீத், விசாரணை நீதிமன்ற அதிகாரி தாஜுத்தீன் சட்ட விரோதமாக கையாண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதி மன்றத்திலே இப்படி முறைகேடுகள் நடந்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக நடிகை பாவனா அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், தனி உரிமை என்பது ஒரு நபருடைய அடிப்படை உரிமை.
பாவனா பதிவு:
இது இந்த அரசியலமைப்பால் எனக்கு வழங்கப்பட்ட உரிமை. ஆனால், ஆதாரம் நிறைந்த மெமரி கார்டின் உடைய ஹாஷ் மதிப்பை பலமுறை மாற்றி இருக்கிறார்கள். நீதிமன்றத்திலேயே என்னுடைய தனி உரிமை பாதுகாப்பாக இல்லை. இது எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவருடைய நீதியை பலப்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் வேலை. ஆனால், நீதிமன்றமே பாதிக்கப்பட்டவர்களை விடுத்து குற்றவாளிகளுக்கு உதவி செய்கிறார்கள். நேர்மையான நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டத்தை தொடருவேன். சத்தியமேவே ஜெயதே என்று பதிவிட்டிருக்கிறார்
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.