உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இது வெள்ளித் திரைக்கு மற்றும் இன்றி சின்னத் திரைக்கும் பொருந்தும். சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘ஸ்டார் ப்ளஸ்’ சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஹிந்தி சீரியல் ‘சஞ்சீவனி’.
மெடிக்கல் டிராமா ஜானரைக் கொண்ட இந்த டிவி சீரியலை இயக்குநர்கள் அபிஜித் தாஸ் – ஜேக்சன் சேதி இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த சீரியலில் சுர்பி சந்தனா, நமித் கண்ணா, மோஹ்நிஷ் பாஹ்ல், குர்தீப் கோஹில், கெளரவ் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கிய ரோலில் பிரபல நடிகை சாந்தினி பக்வானானி நடித்திருந்தார்.
அவர் டாக்டர் ஆஷா கன்வர் என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். நடிகை சாந்தினி பக்வானானி இது போன்ற பல ஹிந்தி சீரியல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவிற்கு சென்ற நடிகை சாந்தினி பக்வானானி ‘கொரோனா’ லாக் டவுன் காரணமாக அங்கயே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில் “முதலில், நான் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன்.
அங்கு செலவுகள் அதிகரிக்கவே நான் அங்கிருந்து கஷ்டப்படக் கூடாது என்று மெல்போர்னில் இருக்கும் இன்னொரு அப்பார்ட்மென்ட்டிற்கு சென்று விட்டேன். அங்கு இரண்டு இந்திய பெண்களுடன் தங்கியிருக்கிறேன். இப்போது, அவர்களுடன் ஷேர் செய்து வாடகை கொடுத்து வருவது எனக்கு வசதியாக இருக்கிறது” என்று நடிகை சாந்தினி பக்வானானி தெரிவித்திருக்கிறார்.