கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பெண்களைஆபாசமாக படமெடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து லட்சக்கணக்கான பணத்தை பறித்ததாக நாகர்கோவிலில் மாவட்டத்தை சேர்ந்த காசி என்ற இளைஞர் ஒருவர் கைதாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோயில் மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி இவரது மகன் காசி என்னும் சுஜி என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டவர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ள காசி சமூக வலைதளத்தில் பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாகி பின்னர், தாம் ஒரு தொழிலதிபர் எனவும் வழக்கறிஞர் எனவும் விமான ஓட்டுனர் பயிற்சியை மேற்கொண்டு வரும் நபர் எனவும் பொய்யாக கூறியுள்ளார்.

மேலும், உடற்பயிற்சி செய்வது போல சில எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை கூட தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். சமூகவலைதளத்தில் பெண்களை நட்பு பிடித்த பின்னர் அவர்களிடம் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் ,வீடியோ காலில் வல்லுறவில் ஈடுபட்டு பின்னர் அதனை அந்த பெண்களுக்கு தெரியாமலேயே புகைப்படத்தை எடுத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : திருமண பேச்சை ஆரம்பித்த பின்னர் தான் எங்க ரெண்டு பேருக்கே தெரியும்- திருமணத்திற்க்கு பின் கதிர் அளித்த பேட்டி.

Advertisement

இவரை பெண்கள் யாராவது வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டாலோ அல்லது தங்களின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பினால் அதனை இவர் தனது பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை காண்பித்து அந்த பெண்களை பிளாக்மெயில் செய்து வந்துள்ளதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் காசி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் காசி மீது மேலும் 3 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

அதில் 17 வயது கல்லூரி மாணவி உட்பட மேலும் மூன்று சிறுமிகள் காசி என்கிற சுஜி டெமோ மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். இந்த புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில், பொலிஸ் அதிகாரிகள், காசி மீது POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, காசி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், அவரிடமிருந்து பணம் பறித்ததற்காகவும் சென்னை மருத்துவர் ஒருவர் வழக்கு பதிவு செய்தார். நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு பெண் பொறியியலாளர் காசி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்தார்.

Advertisement

மேலும் காசிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வடசேரியில் வட்டி வசூலித்த வழக்கையும் பதிவுசெய்தனர் . இப்போது, ​​குற்றம் காசி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு உட்பட மேலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது’ சைபர் குற்றம் மட்டுமே கவனிக்க முடியும் என்றால், ஒரு சில ஆண்கள் எங்களுக்கு அசிங்கமாக பேசியும் ஆபாசமாக புகைப்படம் அனுப்பியதாக நாங்கள் பல முறை ஆன்லைனில் புகார் அளித்துள்ளோமே.

Advertisement
Advertisement