சன் டீவியிலிருந்து விலகி வேறு டிவிக்கு மாறிய தேவதர்ஷினி ! வெளிவந்த உண்மை காரணம் இதோ

0
1244

காஞ்சனா படத்தில் கோவை சரலாவுடன் சேர்ந்து காமெடியில் அசத்தி இருப்பார் நடிகை தேவதர்ஷினி. இவர் கடந்த 2004ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார்.

devadarshini actress

பார்த்திபன் கனவு

எனக்கு 20 உனக்கு 18

அழகிய நீயே

சரவணா

தீபாவளி

கிரீடம்

வேல்

சரோஜா

கண்ணா லட்டு தின்ன ஆசையா, என பல படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியவர் தேவதர்ஷினி. தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துள்ளதால் சன் டிவியில் ‘சண்டே கலாட்டா’ என்னும் நிகழ்ச்சியில் காமெடி சகோ செய்து வந்தார்.

கடந்த 6 வருடமாக இதே ஷோவை ஒரே மாதிரி செய்து வருவதால் தற்போது மக்களுக்கு போர் அடித்துள்ளது. இதனால் சன் டிவி நிர்வாகம் இந்த ஷோவிற்கு பதில் வித்யாசமாக ஏதாவது செய்யுங்கள் என கேட்டுள்ளனர்.

Actress Devadarshini

ஆனால், தேவதர்ஷினி இனிமேல் இந்த சேனலில் எந்த ஷோவையும் செய்ய போவதில்லை என விலகி உள்ளார். இதனால் ஞாயிற்றுக்கிழமை சண்டே ஸ்பெஷல் ஷோவில் தேவதர்ஷினியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வேறு ஒரு சேனலில் இணைந்து ஒரு வித்தியாசமான ஷோவை செய்ய போகிறார் தேவதர்ஷினி.