புற்று நோயால் இறந்த பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் அண்ணன் – இவரும் ஒரு நடிகர் தான்.

0
1950
disco
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், பாடல்களுக்கு நடனம் ஆடும் மங்கையாகவும் தான் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். இவர் 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். டிஸ்கோ சாந்தி, சிறீஹரி என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் 2013ம் ஆண்டில் இறந்துவிட்டார்.தன்னுடைய குடும்பத்தையும்,பிள்ளைகளையும் இவர் தான் பார்த்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிஸ்கோ சாந்தி, என்னுடைய கணவரின் மறைவுக்கு பிறகு நான் அவர் தொடங்கிய சேவை பணிகளை செய்கிறேன்.

இதையும் பாருங்க : அன்னையர் தினத்தில் காலமான வெங்கட் பிரபு – பிரேம்ஜியின் தாயார். இவர் தான் இவர்களின் அம்மா.

- Advertisement -

நடிக்க வந்த காலம் முதல் இப்போது வரை என்னுடைய சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேவைக்கு என்று நான் ஒதுங்கி விடுவேன். நாங்கள் படிக்க வைத்த பல பேர் டாக்டர், வக்கீல் என பல பதவியில் இருக்கிறார்கள் என்று கூறி இருந்தா. இப்படி கணவரை இழந்து தனியாக தவித்து வந்த டிஸ்கோ சாந்திக்கு ஆதரவாக இருந்தது அவரது அண்ணன் அருண்மொழிவர்மன் காலமாகி உள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தி சகோதரர் அருண்மொழி வர்மன் மரணம்...! கண்ணீரில் மூழ்கிய  குடும்பத்தினர்..! | disco shanthi brother arunmozhi varman death

அருண் மொழி வர்மன் தமிழில் சிமிழ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். தெலுங்கில் ஶ்ரீஹரி நடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்மொழி வர்மனுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் அருண்மொழி வர்மன் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. . அவருக்கு ஷர்லி என்ற மனைவியும், அப்ரினா, மகாலட்சுமி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement