எப்ப பாத்தாலும் இதான் கேப்பீங்களா -செம கடுப்பான எதிர்நீச்சல் ஜான்ஸி – இவங்க இவ்ளோ கோபக்காரியா ?

0
2543
- Advertisement -

அட்ஜ்ஸ்ட்மென்ட் குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் குணசேகரன் தன்னுடைய தங்கை ஆதிரைக்கு பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இந்த திருமணத்தில் வீட்டில் உள்ள யாருக்குமே விருப்பமில்லை. ஆனால், குணசேகரன் தான் நினைத்தது தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் ஆதிரை- அருண் திருமணத்தை நடத்த ஜனனி மற்றும் வீட்டில் உள்ள மற்ற மருமகள் திட்டம் தீட்டுகிறார்கள். இதில் குணசேகரன் வெற்றி பெறுவாரா? ஜனனி வெற்றி பெறுவாரா? என்ற பல அதிரடித் திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் கரிகாலனின் அம்மாவாக இருக்கும் ஜான்சி ராணி பயங்கர பித்தலாட்ட வேலைகளை செய்து கஞ்சா விற்கும் பெண்ணாக இருக்கிறார். சீரியலில் வரும் ஜான்சி ராணியின் உண்மையான பெயர் காயத்ரி கிருஷ்ணன். இவர் பல ஆண்டு காலமாக தொகுப்பாளராக இருந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

காயத்திரி கிருஷ்ணன் குறித்த தகவல்:

அதோடு இவர் திருநங்கைகள் பற்றி phd பட்டமும் பெற்றிருக்கிறார். மேலும், மாடலிங்கில் இவர் கலக்கிக் கொண்டிருந்தார். சமீபத்தில் வெளியான அயலி என்ற வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்நிலையில் சமீபத்தில் நடிகை காயத்ரி கிருஷ்ணன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்ட கேள்விக்கு காயத்ரி கிருஷ்ணன் கூறியிருப்பது, எவ எவன் கூடயோ அட்ஜ்ஸ்ட்மென்ட் செஞ்சிட்டு போறாள்.

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து காயத்திரி கொடுத்த பதில்:

உங்களுக்கு என்னடா வந்தது. அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சா நடிக்கிறா, இல்லனா வீட்டுக்கு போற. அது அவளோட விருப்பம். இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை. ஒரு நடிகை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுமா? இப்படி கேட்டுவிட்டால் உடனே அந்த நடிகை கண்ணீர் வடித்து பதில் சொல்ல வேண்டுமா? தொடர்ந்து இது போன்ற கேள்விகளை கேட்டு நடிகைகளை மனதாலும் உடம்பாலும் ஏன் சாவடிக்கிறீர்கள். நிறைய சேனல் இந்த மாதிரி கேள்வி கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இதனால் பல நடிகைகள் பேசவே தயங்குகிறார்கள் என்று ஆக்ரோஷமாக நடிகை காயத்ரி கிருஷ்ணன் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது .

Advertisement