திருமணத்திற்கு பின் நடிப்புக்கு டாடா சொன்ன கோபிகா – அவரின் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம்.

0
1268
gopika
- Advertisement -

தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் நடித்து அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சினேகா, மல்லிகா, கோபிகா என்று மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிநேகாவிற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது நடிகை கோபிகா தான். இந்த படத்தில் நடித்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார் நடிகை கோபிகா.

-விளம்பரம்-

நடிகை கோபிகா, 1985ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே பார்த்ததின் மீதுள்ள ஆர்வத்தினால் பரதநாட்டியம் கற்று தேர்ந்தவர் கோபிகா. முதலில் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என நினைத்தார். ஆனால், 2002ஆம் ஆண்டு ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் கோபிகா மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பினை பெற்றார்.

- Advertisement -

அந்த திரைப்பம் மாபெரும் வெற்றியடைவே அந்த திரைப்படத்தை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இதன்காரணமாக அவரும் ஆர் ஹோஸ்டஸ் ஆசையை விட்டுவிட்டு சினிமா ட்ராக்கில் வந்து சேர்ந்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார்.

தமிழில், ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார் கோபிகா. இந்த இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களை கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் கோபிகா.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பது முற்றிலும் நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார் கோபிகா. சமீயத்தில் இவரது குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகை கோபிகா அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலும் மாறிப்போய்யுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement