நடிகை கௌதமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் திருமண புகைப்படம்.

0
3270
gauthami
- Advertisement -

தமிழில் கடந்த 1988ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை கௌதமி. அதற்கு அடுத்த வருடம் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார். பெங்களூருவில் இருந்து தனிமனுஷியாகப் புறப்பட்டு வந்து, முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ‘குருசிஷ்யன்’ படத்தில் அறிமுகமானவர். இப்போது பி.ஜே.பி-யில் பிஸியாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன். வானதி சீனிவாசனுக்கு முன்னரே பி.ஜே.பி கட்சியின் அகில இந்திய இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தவர் கெளதமி.

-விளம்பரம்-
gautami-sandheep

தமிழில் பல்வேறு படங்களில் நடித்த கௌதமிக்கும் கமலுக்கும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் போது தான் நட்பு ஆரம்பித்தது. அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபருடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. ஆனால் 1999ஆம் ஆண்டு இருவரும் தகருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இதற்கு காரணம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கவுதமி கூறினார். தற்போது கவுதமி அவரது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார். கமல் தனது வாழ்க்கையை கையில் எடுத்து அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இதற்கிடையில் கௌதமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த கௌதமி புற்று நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வ்களையும் பெண்கள் மத்தியில் செய்து வருகிறார்.

sandeep-bathia

சமீபத்தில் சென்ற புத்தாண்டு தினத்தன்று நடிகை கௌதமி, துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடி அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் நடிகை கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்தில் மறைந்த நடிகையும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவும் இருக்கிறார். இந்த அறிய புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement