தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. தமிழில் கடந்த 1988 ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.
கடைசியாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பாபநாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்னும் தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கவுதமி.
ஆனால் 1999 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர்.
இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகிறார். மேலும், இப்போது இவர் பி.ஜே.பி கட்சியில் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கௌதமி அவர்கள் தன்னுடைய மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தனது மகளுக்கு 21 வயது ஆகி விட்டது என்றும் கூறியிருக்கிறார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு நெட்டிசன்கள் அனைவரும் இது தான் கௌதமியின் மகளா?? என்று கேட்டு வருகின்றனர். மேலும், பல வருடங்கள் கழித்து இவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்கு சினிமாவில் ஏதாவது நடிக்கப் போகிறாரா? என்று கேட்டு வருகின்றனர்.