சமீப காலமாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சின்ன குழந்தை இளம் பெண்கள் வரை கற்பழிப்பு சம்பவங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். நிர்பயா துவங்கி சமீபத்தில் உயிரிழந்த மனிஷா வால்மீகி வரை பல்வேறு குழந்தைகள் மற்றும் பெண்கள் கயவர்களால் நாசமாக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வால்மீகி என்பவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது நாடுமுழுதும் அதிர்ச்சயை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரின் நாக்கை அறுத்து, முதுகெலும்பு கழுத்து பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனிஷா கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன மனிஷாவை இந்த நிலைமைக்கு ஆளாகி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றே நாடு முழுதும் குரல் எழுந்தது.
மேலும், பல்வேறு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை பகிர்ந்து நிலையில் நடிகை ஹிந்தி ராஜா சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களை குறிப்பிடும் வகையில் இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்திராஜாவின் இந்த போட்டோ ஷூட்டை பலரும் கனத்த நெஞ்சத்தோடு பாராட்டி வருகின்றனர். நடிகை இந்திரஜா, பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா.பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் கூட கூறியிருந்தார்.