சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகை யாஷிகா தனது காரில் தனது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் சென்னை திரும்பியுள்ளார்.மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.
இதில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், யாஷிகா அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதில் யாஷிகாவிற்கு ஆனந்துக்கு கை, கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. யாஷிகாவிடம் விசாரிக்கப்பட்டுள்ள போது காரை தான் தான் ஒட்டி வந்ததாக கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : என்னது, பிரியாமணி ரெண்டாம் தாரமா – முதல் மனைவியால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் (இரண்டு குழந்தையே இருக்காம்)
இதனால் அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால், யாஷிகா குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தினாரா என்று அவர் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சிலர் ஷாக்கிங்கான விஷயங்களை கூறியுள்ளார். அந்த கார் 120 கி மீ வேகத்தில் சென்றதாகவும் விபத்து நடந்ததும் பின்னாலே 3 கார்களில் அவர்களுடன் வந்ததாகவும் எல்லாரும் போதையில் இருந்ததாகவும் கூறி இருக்கின்றனர்.