தேவரா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அழகான தமிழ் மொழியில் ஜான்வி கபூர் கொஞ்சி பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு மொழியில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் வெளிவந்த RRR படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது .
இதை அடுத்து தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தேவரா’ . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கி இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
தேவரா படம்:
இதுதான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம். மேலும், இவர்களுடன் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், நரேன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்கள் சந்திப்பு:
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது மேடையில் நடிகை ஜான்வி கபூர், சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் அம்மாவுடன் இருந்த நிறைய நினைவுகள் சென்னையில் தான் இருக்கிறது. நீங்கள் என் அம்மாவிற்கு கொடுத்த ஆதரவால் தான் நானும் என்னுடைய குடும்பமும் இந்த நிலைமையில் இருக்கிறோம்.
தமிழில் பேசிய ஜான்வி:
அதற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைப்பேன் என்று அழகான தமிழில் பேசி இருக்கிறார். இப்படி இவர் தடுமாறாமல் தெளிவாக தமிழ் பேசுவதை பார்த்து பலருமே வியப்பில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவருடைய மகள் தான் ஜான்வி கபூர்.
ஜான்வி கபூர் குறித்த தகவல்:
இவர் பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின் இவர் சினிமா, வெப் சீரிஸ் என்று பிசியாக நடித்து வருகிறார்.இவர் அதிகம் ஹிந்தியில் தான் நடித்து இருக்கிறார். தற்போது இவர் தெலுங்கு மொழியில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடிய விரைவில் இவர் தமிழில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.