நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயபிரதாவிற்கு நீதிமன்றம் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் ஜெயப்பிரதா. இவர் 70, 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் 30 ஆண்டுகளாக சினிமாவில் பயணத்திருக்கிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

இதனிடையே இவர் தயாரிப்பவர் ஸ்ரீகாந்த் நகதாவை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். அதற்கு பின்பு என்டி ராமராவின் தேசக்கட்சியில் இணைந்து 1994 ஆம் ஆண்டு இணைந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடு உடன் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக அந்த கட்சியில் இருந்தும் நடிகை ஜெயப்பிரதா விலகிவிட்டார். பின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

அரசியலில் ஜெயப்பிரதா:

மேலும், இவர் 2004 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொது தேர்தலின் போது ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதன் பின் இவர் அரசியலில் கவனம் செலுத்தி இருக்கிறார். இந்த நிலையில் ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சென்னை சேர்ந்த ராம்குமார், ராஜ் பாபு ஆகியோருடன் சேர்ந்து ஜெயப்பிரதா அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.

Advertisement

ஜெயப்பிரதா செய்த வேலை:

இவர்கள் அங்கு வேலை செய்த தொழிலாளர்களிடம் இஎஸ்ஐ தொகையை வசூலித்திருக்கிறார்கள். பின் அதை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் செலுத்தவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதை அடுத்து ஜெயபிரதா, ராம்குமார், ராஜ் பாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனு தாக்கலையும் தள்ளுபடி செய்திருக்கிறது.

Advertisement

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

இதனை அடுத்து இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அதில் தொழிலாளர்களிடம் வாங்கிய தொகையை திருப்பி செலுத்துவதாக ஜெயப்பிரதா தரப்பில் கூறியிருந்தார்கள். ஆனால், இதற்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா, ராம் குமார், ராஜ் பாபு ஆகிய மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை, ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது.

Advertisement