எதிர்நீச்சல் சீரியலில் மோகன் பட நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.
இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து அவர்களை அடிமையாக நினைத்து வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியல்:
இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இப்படி பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலாக மோகன் பட நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜெயஸ்ரீ திரைப்பயணம்:
அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகை ஜெயஸ்ரீ. இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். 1985 ஆம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளிவந்திருந்த தென்றல் என்னை தொடு என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின் ஜெயஸ்ரீ:
இடையில் சில காலம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஜெயஸ்ரீ. இதனால் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு கூட இவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
ஜெயஸ்ரீ நடிக்கும் சீரியல்:
அதில் அவர் தன்னுடைய அமெரிக்க அனுபவம் குறித்து கூறி இருந்தார். இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ மீண்டும் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் தான் கெஸ்ட் ரோலாக நடிக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.