தனது பெயரில் இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ. போலீசில் புகார் அளித்த சீரியல் நடிகை.

0
7736
juhi
- Advertisement -

சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் நடிகைகளின் புகைப்படங்களையும், மொபைல் எண்களையும் தவறுதலாக பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்தும் பல நடிகைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சோசியல் மீடியா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து இந்த மாதிரி சர்ச்சைகள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை விளையாட்டுக்காகவா? வீம்புக்காக செய்கிறார்களா? என்று தெரியவில்லை. இதனால் பல நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Juhi Rastogi reveals about the person who first kissed her: Video ...

அந்த வகையில் தற்போது மலையாள தொடரில் நடிக்கும் நடிகை ஜூஹி ரஷ்டகி பாதிக்கப்பட்டு உள்ளார். மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஜூஹி ரஷ்டகி. இவர் நடித்த உப்பும் மிளகும் என்ற நகைச்சுவை தொடர் கேரள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் பாருங்க : ‘8000 கோடி பேருக்கு 5000 கோடி’ – ஒய் ஜி மகேந்திரன் மகளை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்.

- Advertisement -

அதோடு இவர் தொடர்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பிரதமர் மோடி அவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதனால் தற்போது பொதுமக்களும், நடிகர், நடிகைகளும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் அதிகம் பயன்படுத்துவது சோசியல் மீடியாவை தான். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல சீரியல் நடுங்கி ஜூஹி ரஷ்டகி என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : தனது மகளுக்கு அம்மாவின் நினைவாக பெயர் வைத்துள்ள ராதிகாவின் மகள்.

-விளம்பரம்-

மேலும், இந்த ஆபாச வீடியோவை பார்த்த மலையாள ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை சோசியல் மீடியாவில் பலர் வைரலாக்கியும் வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியான நடிகை ஜூஹி ரஷ்டகி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஜூஹி ரஷ்டகி கூறியது, என்னுடைய பெயரில் ஆபாச வீடியோ ஒன்றை யாரோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இது போலி வீடியோ என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். இந்த வீடியோவை வெளியிட சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் டி.ஜி.பியிடமும், எர்ணாகுளம் போலீசிலும் புகார் அளித்து உள்ளேன் என்று நடிகை ஜூஹி ரஷ்டகி கூறியுள்ளார்.

Advertisement