‘உங்க மாமனார்ட போய் கேளு’ தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா சர்ச்சை கருத்து – வறுத்தெடுத்த நடிகர்.

0
8593
- Advertisement -

இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோயினியாக கலக்கியவர் நடிகை ஜோதிகா. சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். இவர் தமிழில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். அதன் பின் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற JFW விருது விழா ஒன்றில் ஜோதிகா அவர்கள் கலந்து கொண்டார். அதில் அவர் புடவை அணிந்து வந்திருந்தார். அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் சில வார்த்தைகளை பேசி உள்ளார். அதில் ஜோதிகா அவர்கள் கூறியிருப்பது, தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்.

இதையும் பாருங்க : Lockdown : கருணாஸ் பட நடிகைக்கு மனநல பாதிப்பு. என்ன கொடுமை இது.

- Advertisement -

அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ஜோதிகாவை தாறுமாறாக வறுத்து எடுத்து வருகிறார்கள். அதிலும் சிலர் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் உள்ள தஞ்சை பெரியகோயில் ஆரம்ப காலத்தில் குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலையாகவும், உணவு சேர்த்து வைக்கும் தானியக்கிடங்காகவும், மன்னர்கள் கூடும் சட்ட சபையாக இருந்தது.

https://twitter.com/SVESHEKHER/status/1252851629834960903

இப்படி தமிழனின் உணர்வில் கலந்து இருக்கும் தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. லட்சகணக்கில் செலவு செய்து மேக்-கப் போடும் உங்களுக்கு தஞ்சைபெரிய கோயிலை பற்றி பேசுவதா? என்று ஜோதிகாவை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டி வருகின்றனர். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் பாருங்க : Breaking News : கொரோனா நிதி அளித்த விஜய். அஜித்தை விட அதிகம் தான். எத்தனை கோடினு பாருங்க.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க ஜோதிகா பேசிய வீடீயோவை பகிர்ந்த பிரபல நடிகரான எஸ் வி சேகர், ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து ஜோதிகா அவர்கள் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, செக்க-சிவந்த-வானம், ஜாக்பாட், தம்பி என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவரப்போகிறது.

Advertisement