சூர்யா மனைவியாக இல்ல, சினிமா காதலராக கேட்கிறேன் – கங்குவா நெகடிவ் விமர்சனங்கள் குறித்து ஜோதிகா ஆதங்கம்

0
279
- Advertisement -

கங்குவா படம் குறித்து நடிகை ஜோதிகா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் கங்குவா படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா.

-விளம்பரம்-

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா
தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி வருகிறார்கள்.

- Advertisement -

கங்குவா படம்:

குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து வருகிறது. இருந்தாலும், இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 58.62 கோடி வசூல் செய்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கங்குவா படம் குறித்து நடிகை ஜோதிகா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த பதிவை நான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் தான் எழுதுகிறேன். நடிகர் சூர்யாவின் மனைவியாக இதை நான் எழுதவில்லை. கங்குவா- திரை உலகில் ஒரு அதிசயம். சூர்யா உங்களை நினைத்து ரொம்ப பெருமையாக இருக்கிறது.

ஜோதிகா பதிவு:

ஒரு நடிகராக சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் காணும் கனவுகளும், முயற்சிகளும் என்னை பெருமிதம் கொள்ள செய்கிறது. நிச்சயமாக கங்குவா முதல் அரை மணி நேரம் சரியாக இல்லை. இரைச்சலாக இருக்கிறது. இந்திய சினிமாக்களில் பிழைகள் இருக்கத்தான் செய்கிறது. அதனால் இந்த பிழையும் நியாயமானது தான். குறிப்பாக, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த மாதிரி பிழைகள் வருவது இயல்பு தான். அது முழு மூன்று மணி நேரத்தில் இருந்து முதலில் அரை மணி நேரத்தை மட்டும் குறிக்கின்றது. ஆனால், உண்மையில் இது ஒரு அசல் திரையுலக அனுபவம் ஆகும்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

கேமரா பணியும், அதன் செயல்பாடும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு என் பாராட்டுக்கள். நான் ஊடகங்களில் வந்த எதிர்மறை விமர்சனங்களை பார்த்து ரொம்பவே ஆச்சரியமானேன். காரணம், அவர்கள் இதே மாதிரி இதற்கு முன் வந்த பெரிய பட்ஜெட் படங்களை இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்யவில்லை. அவர்கள் படங்களில் பெரும்பாலும் பழமையான கதை, பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்த உரைகள் பேசுதல், மிக மிக அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் உள்ளது. ஆனால், கங்குவாவின் நேர்மறையான சாதனைகளை யாருமே கண்டு கொள்ளவில்லை.

விமர்சனங்களுக்கு கொடுத்த பதிலடி:

இரண்டாம் பாதியில் பெண்களுக்கான ஆக்சன் காட்சி, கங்குவா எதிர்கொண்ட வஞ்சனை பற்றி யாருமே விமர்சிக்கவில்லை. அவர்கள் விமர்சனம் செய்யும் பொழுது நல்ல பாகங்களை மறந்து விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். கங்குவா குறித்து முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்களை சொன்னது வருத்தமாக இருக்கிறது. முதல் காட்சி முடியும் முன்பே விமர்சனங்கள் வந்துவிட்டது. கங்குவா குழுவின் உடைய 3டி உருவாக்கம் முயற்சிகளும் பாராட்டுக்கு தகுதியானது தான். கங்குவா குழுவே பெருமைப்படுங்கள். காரணம், எதிர்மறை விமர்சனங்களை சொல்லுவோர் அதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவை முன்னேற்றுவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement