திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆன காதல் சந்தியா. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
1467
kadhal

காதல் படம் சந்தியாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். மேலும்,தற்போது கூட காதல் படம் என்றாலே அனைவருக்கும் சந்தியா தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த அளவிற்கு அந்த படம் பெரிய அளவில் ஹிட்டாச்சி. மேலும், காதல் பட நடிகை சந்தியா இப்போ என்ன பண்றாங்க? எப்படி இருக்கிறார்கள்? என்பதை பற்றி பார்க்கலாம்….சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமா உலகத்திற்காக தான் சந்தியா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சந்தியா அவர்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் காதல் திரைப் படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்று உள்ளார். தற்போது கூட இவரை அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள். சந்தியா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

மேலும்,காதல் திரைப் படத்தில் நடிக்கும் போது இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதற்கு பின்பு சந்தியா அவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு முழு கவனமும் நடிப்பதில் செலுத்தி வந்தார்.அதற்கு அடுத்து ஜீவாவுடன் இணைந்து ‘டிஸ்யூம்’ என்ற படத்தில் நடித்தார். அதோடு இவர் தமிழில் ‘காதல், டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில், வெள்ளித்திரை, மகேஷ் சரண்யா மற்றும் பலர், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

ஆனால், இவர் நடித்த காதல்,டிஸ்யும் படங்கள் தந்த வெற்றிக்குப் பிறகு வேறு எந்தப் படமும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை.மேலும், இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். பின் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் காதல் சந்தியாவின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்த்த பலரும் காதல் சந்தியாவா இது என்று வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement