ஹனிமூன் சென்ற இடத்தில் நீச்சல் உடை புகைப்படங்களாக பகிர்ந்து வரும் காஜல் அகர்வால்.

0
1046
kajal

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹனி மூன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.

இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது திருமணம் பற்றிய அதிகார பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தார் காஜல் அகர்வால். இதுகுறித்து தனது சமூக வளைத்தளத்தில் தெரிவித்திருந்த காஜல் அகர்வால், தனக்கு வரும் 30 ஆம் தேதி மும்பையில் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமணத்திற்கு பின்னரும் தான் கண்டிப்பாக நான் விரும்பும் வேலையை தொடர்ந்து செய்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்றும் கூறி இருந்தார்.காஜல் அகர்வாலின் திருணம் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் பெரும்பாலும் பிகினி உடைகளில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதே போல காஜல் அகர்வால் தங்கிய muraka என்ற ஹோட்டல் அறையின் ஒரு நாள் வாடகை மட்டும் $50000 அதாவது இந்திய மதிப்பில் 37 லட்சம். இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் 16 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே இருந்தபடி கடலின் அழகை ரசிக்கலாமாம் அதனால் தான் இதற்கு இத்தனை லட்சமாம். ஆனால், இந்த 37 லட்சத்தை வைத்து ஒரு கல்யாணத்தையே நடத்திவிடலாமே என்பது பலரின் குமுறல்.

-விளம்பரம்-
Advertisement