அட கொடுமையே, காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு நோயா – மூச்சி விடவே கஷ்டமாச்சே.

0
1697
kajal
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். நடிகை காஜலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி மும்பையில் கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம்நடைபெற்றது.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். இப்படி ஒரு நிலையில் நடிகை காஜல் அகர்வால், தனக்கு 5 வயதில் இருந்தே தனக்கு இருக்கும் நோய் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனக்கு 5 வயதில் ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு எனக்கு உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது நினைவிருக்கிறது. ஒரு குழந்தை பால் பொருட்கள், சாக்லெட் சாப்பிடக்கூடாது என்பது பாவம் தானே. 

- Advertisement -

நான் வளர்ந்த பிறகும் பிரச்சனை சரியாகவில்லை. ஒவ்வொரு முறையும் பயணிக்கும் போதும், பனி, தூசு, புகை போன்ற விஷயங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலோ ஆஸ்துமா பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் நான் இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். அதன் பின்னர் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.இப்பொழுது எப்போதும் இன்ஹேலருடன் இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். இதனால் என்னை ஒரு மாதிரி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். 

kajal

நம் நாட்டில் பலருக்கு இன்ஹேலர் தேவைப்படுகிறது. ஆனால் அடுத்தவர்களின் ரியாக்ஷனுக்காக இன்ஹேலர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில் இன்ஹேலர் பயன்படுத்த வெட்கப்படத் தேவையில்லை. இதை இந்தியா உணர, நான் இன்ஹேலர்களுக்கு எஸ் சொல்கிறேன் #SayYesToInhalers உடன் இணைய என் நண்பர்கள், குடும்பத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்துமா குறித்தும், இன்ஹேலர் பயன்பாடு பற்றியும் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் எனக்கூறி முதற்கட்டமாக உன்னி முகுந்தன், ஜான் ஆபிரகாம், சிரஞ்சீவி ஆகிய நடிகர்களை நாமினேட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement