நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட காஜலின் தங்கை.

0
4182
kajol-sister
- Advertisement -

பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை கஜோல். இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் என்று பல்வேறு நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள கஜோல், தமிழில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகியிருந்த மின்சார கனவு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் நடிகை கஜோல் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இவரது தங்கை நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழில் என்ட்ரி கொடுத்தார். நடிகை கஜோல் தனிஷா முகர்ஜி என்ற தங்கையின் இருக்கிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Feel the sun! It heals ! ?

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji) on

தமிழில் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளியான படம் ‘உன்னாலே உன்னாலே’ என்ற படத்தில் நடிகர் வினைய்க்கு ஜோடியாக சதா நடித்திருப்பார்.மற்றொரு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தனிஷா முகர்ஜி. பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தங்கையான இவர் 1978 இல் மும்பையில் பிறந்தார். பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ,சுனில் ஷெட்டி போன்ற முன்னணி ஹரோகளுடன் நடித்தவர். அப்படி இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வராததால் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில் இவரால் ஜொலிக்கமுடியவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் நிஷா சின்னத்திரைக்கு தாவினர்.

இதையும் பாருங்க : இவங்களுக்காக தான உடலை குறைசீங்க. ரசிகரின் கேள்விக்கு பதில் கூறிய விஷ்ணு விஷாலின் வெளிநாட்டு தோழி.

- Advertisement -

இவர் 2013 இல் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் 2 ஆம் பரிசையும் வென்றார் நிஷா.அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற 47 வயதாகும் அர்மீன் கோலியை காதலித்து வந்தாக பல தகவல்கள் வெளியாகின.பின்னர் இவர்கள் இருவரும் 2014 இல் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இன்னும் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் என்டெர்ட்டைன்மன்ட் ஈ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நான் இன்னும் இருக்கிறேன் என்று அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்கி உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதில் என்ன விடயம் என்றால் தற்போது இவருக்கு 41 வயதிற்கு மேல் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement