இதய திருடன் படத்தில் நடித்த காம்னாவா இது. திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கார் பாருங்க.

0
96489
kamna
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் காணாமல் போய் விடுகிறார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும்போது மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது. அப்படி சினிமாவில் விட்டு பல்வேறு நடிகை நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தவகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதை திருடிய நடிகை காம்னா என்ன ஆனார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

-விளம்பரம்-
Actress-kamna

மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். மேலும் ,கல்லூரி படிக்கும் காலத்திலேயே மாடல் துறையில் ஈடுபாடு இருந்ததால் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பட்டத்தையும் பிடித்தார். மேலும், 2004 ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படத்தின்ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு 2005 ஆம் ஆண்டு பிரேமிக்குலு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர் இயக்குனர் சரன் பார்வையில் விழுந்ததால் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

- Advertisement -

சரண் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் காம்னா. ஆனால், அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து நடித்து வந்தார். இதய திருடன் படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து, நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தப் படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார்.

Image result for kamna jethmalani marriage"
Image result for kamna jethmalani marriage"

இருப்பினும் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 2014 இல் பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுகு படத்தில் நடித்தார். பின்னர் குழந்தைக்கு தாயானதால் சினிமாவில் நடிப்பதை சிறிது ஆண்டுகள் நிறுத்தினார் காம்னா. இறுதியாக 2019 ஆம் ஆண்டு கூட இவர் கருடா என்னும் கன்னட படத்தில்நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. குழந்தை பிறந்த பின்பு கூட காமினி அந்த படத்தில் நடித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

-விளம்பரம்-
kamna

திருமணத்திற்கு பின்னர் நடிகை காம்னாவுக்கு குழந்தை பிறந்தாலும் இது வரை அவரது குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகாமல் தான் இருந்தது. மேலும், காம்னாசமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு கணக்கையும் வைத்திருக்கவில்லை. இதனால் இவர் தற்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. தற்போது காம்னா கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடம் பெங்களூரில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement