80 கோடி சொத்துக்களை பத்மாவதிக்கு தானம் கொடுத்த பழம்பெரும் நடிகை காஞ்சனா – பின்னனயில் இப்படி ஒரு சோகம்.

0
849
kanchana
- Advertisement -

சினிமாவில் நடித்த நட்சத்திரங்கள் பலர் பல கோவில்களை கட்டி கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில், ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா கோவில், யோகிபாபு கட்டிய வாரகி அம்மன் கோவில் என பலர் கோவில்களை காட்டியிருக்கின்றனர். ஆனால் அதனை தாண்டி சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு தானமாக கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகையான காஞ்சனா.

-விளம்பரம்-

இவரது இயற்பெயர் வசுந்தரா தேவி. இவர் தொடக்கத்தில் விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணாக இருந்து 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாக்கினார். இந்த படத்தில் தான் இயக்குனர் ஸ்ரீதர் இவருக்கு காஞ்சனா என்ற பெயரை வைத்தார். ஏனென்றால் அப்போது வசுந்தரா தேவி என்ற பெயரில் நடிகை வைஜயந்தி மாலாவின் தாயும் இதே பெயரில் நடித்து கொண்டிருந்ததால் இந்த காஞ்சனா என்ற பெயர் மாற்றத்துடன் அறிமுகமாகினார் வசுந்தரா தேவி.

- Advertisement -

80 கோடி தானம் :

இவர் நடித்த “காதலிக்க நேரமில்லை” படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் வாய்ப்புகள் குவியத்தொடங்கின. தொடர்ந்து படங்களில் 46 வருடங்கள் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஞ்சனா சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி நடித்த படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் இதனை காலம் சம்பாதித்த சுமார் 80கோடி ரூபாய் சொத்துக்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார் காஞ்சனா.

திருப்பதிக்கு வேண்டுதல் :

இவர் எழுதி வைத்த சொத்துக்கள் தொடக்கத்தில் தன்னுடைய உறவினர்கள் அபகரித்து கொண்டதாகவும், பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு இந்த சொத்துக்கள் கடவுளின் அருளால் கிடைத்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் கூறினார். அதோடு இந்த சொத்துகள் திரும்பி கிடைத்தால் அதனை திருப்பதி சாவாமிக்கு எழுதி வைப்பதாக வேண்டிக்கொண்டுள்ளார். சொத்துக்கள் திரும்பி கிடைத்த நிலையில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு தானமாக கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

பத்மாவதி கோவில் :

இவர் கொடுத்துள்ள சொத்துக்களில் தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் உள்ள 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் அடங்கும்,

காஞ்சனா பேட்டி :

இப்படியொரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காஞ்சனா “தான் சிறிய வயதில் இருந்து தொடர்ந்து நடிப்பதினால் திருமணம் செய்து வைப்பதை கூட என்னுடைய பெற்றோர்கள் மறந்து விட்டனர். நான் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என்ற தவறான செய்திகளை நம்பவேண்டாம். நான் என்னுடைய சகோதரியின் அரவணைப்பில் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது என என்னுடை பொழுதுகள் கழிந்து வருகின்றது என்று தனக்கு இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் பிராத்திப்பதாகவும் நடிகை காஞ்சனா கூறினார்.

Advertisement