விஜயகாந்த் இப்படி பட்டவரா..!யாருக்கும் தெரியாத விஷத்தை சொன்ன கஸ்தூரி..!

0
470
Vijayakanth Kasthoori

ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்வந்து நிற்பவர் தான் நம்ப கேப்டன்.

Kasthuri

என்னதான் இவரை கலாய்த்து பல மீம்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் இவருக்கு தனி இடம் என்பது எப்போதும் உண்டு. தற்போது உடல் நல குறைவால் அவதிபட்டு வந்தாலும், சமீபத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய்கான நிதியுதவியும் அளித்தார் கேப்டன்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி விஜயகாந்த் குறித்து பலரும் அறிந்திடாத அவரது உதவி செய்யும் குணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நடிகை கஸ்தூரி, விஜயகாந்த் பொறுத்தவரை அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல உதவிகள் செய்துள்ளார். ரொம்ப தாராள மனசு காரார். சில சமயங்களில் தயாரிப்பாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் சம்பளத்தை கூட அவர் வாங்காமல் விட்டுவிடுவார். அவரிடம் யாராவது உதவி என்று கேட்டல் அவர்களை ஒருநாளும் வெறும் கையேடு அவர் அனுப்பியதே இல்லை என்று கூறியுள்ளார் கஸ்தூரி.