விஜய்யின் அரசியல் பேச்சு..! மோசமாக கிண்டல் செய்த கஸ்தூரி..! கடுப்பில் ரசிகர்கள்

0
193
Sarkar

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி “சர்கார்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் பேசிய விஜய்,தமிழ் நாட்டை நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும், நான் முதலமைச்சராக வந்தால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்றும் ஒரு வேலை நான் முதல்வராக வந்தால் முதல் வேலையாக ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசி இருந்தார்.

நடிகர் விஜய் பேசியதை வைத்து பார்க்கும் போது அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் முடிவே செய்து விட்டனர். மேலும், நடிகர் விஜயின் பேச்சுக்கும் பல்வேறு அரசியல் கட்சினரும் தங்களுது விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி நடிகர் விஜய்யின் பேச்சை பாராட்டியுள்ளார்.

actress-kasthuri

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் பேசியது குறித்து பதிவிட்டுள்ள நடிகை காஸ்தூரி, தற்போது தான் விஜய் பேசியதை பார்த்தேன் மிகவும் அசத்தலாக இருந்தது. முதலில் அவர் யாரோ எழுதி கொடுத்ததை பேசினாரா என்று நான் வியந்தேன். ஆனால், அவர் காந்தியை பற்றி பேசிய போது தான் அவர் உள்ளத்தில் இருந்து பேசினார் என்று உணர்ந்தேன். சன் டிவி இதனை நிச்சயம் எதிர்பார்த்திருக்காது என்று கூறியுள்ளார்.