பேருந்து பணியாளர்களை வறுத்தெடுத்த நடிகை கஸ்தூரி !

0
1316
kasthuri
- Advertisement -

கடந்த சில நாடலாக தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டுள்ளது. கடந்த பல வருடங்களாகி நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கி ₹ 7000 கோடியை செலுத்தக் கோரியும் அவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தும் 3 நாட்களாக போக்குவரத்து ஊழியர்களை கொண்ட 20 யூனியன் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
kasthuriஇது குறித்து நடிக்க கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை சாட்டியுள்ளார்,

பல நாள் பாக்கியை கேட்பது நியாயமே. ஆனால், ஒரே நாளில் எல்லோர் பாக்கியையும் திருப்பிக்கேட்டால், chit fund கம்பெனி கதிதானே அரசு கஜானாவுக்கும் ? யாருக்குமே எதுவும் தேறாது ! மக்களை மனதில் வைத்து unions உம் கொஞ்சம் சுமுகமாக பேசித்தீர்க்கலாமே! ,

- Advertisement -

போன மாதம் கூட சம்பள பட்டுவாடா தவணைமுறையில் நடந்தது. பாவம்தான். ஆனால்,அரசுப்பணி என்பதால் வேலைக்கு ஆபத்து வரவில்லை. பிரைவேட் கம்பெனி என்றால்,இந்நேரம் mass layoff செய்திருப்பார்கள். Strikeகை சாக்கு வைத்து அரசு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கல்தா கொடுக்க இடம் தராதீர் தோழரே !

நூற்றாண்டு விழா மட்டுமல்ல, இப்போ பொங்கல் இனாம் வேற . எதுக்கு? உழைப்புக்கான ஊதியத்தை செட்டில் பண்ணாம ஊருக்கே இனாம் கொடுக்கற அரசியல் stunt நியாயமில்லைதான். அதுலயும், காருல வந்து பொங்கல் பரிசை வாங்கிட்டு போறவங்கள அறிவேன்.

என போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திட்டியும், அரசை லேசாக குறை கூறியும் பதிவிட்டு இருந்தார். மேலும், இதற்கும் நெட்டிசன்கள் பல கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Advertisement